

மதுரை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளரக ( S.P.) சுஜித் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சிறப்பாக செயல்படும்,
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் இது தான் முதல் கடமை
மதுரை மாவட்ட மக்களுக்கு எனது வாட்ஸ் அப் எண் கொடுக்கப்படும், பொது மக்கள் என்னுடைய 94981 12113 என்ற எண்ணில் புகார் கொடுத்தால், நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.
எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் பொது மக்கள் தகவல் கொடுக்கலாம்.
மதுரையில் மைனர் திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவைகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.
மதுரையில் முழு ஊரடங்கு காலத்தில் தளர்வு இல்லாத பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது,சமூக இடைவெளி கேள்வி குறியாகி உள்ளது என்ற கேள்விக்கு,
சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பலபடுத்தப்படும்
என்று கூறினார் .. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்