இந்திய அளவில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4ஆம் இடம்…பாராட்டு தெரிவித்த உயர்அதிகாரிகள்..

215

இந்திய அளவில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4ஆம் இடம்…..!

2017 – 18 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதிலும் உள்ள 15 ஆயிரத்து 579 காவல் நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் தேசிய அளவில் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியில் வெளியிடப்பட்டது. இதில் தேனி மாவட்டம் தேனி உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் 4 ஆம் இடம் பிடித்தது. இதற்கான சான்றிதழ் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டு அதை இன்று 13:07:2020 ஆம் தேதி தெற்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் எஸ்.முருகன் இ.கா.ப., அவர்களால் தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையர்திலகம் அவர்களிடம் வழங்கப்பட்டது. உடன் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு எம்.எஸ்.முத்துச்சாமி,இ.கா.ப., அவர்களும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி, இ.கா.ப., அவர்களும் கலந்து கொண்டனர். மேற்படி காவல் நிலையத்தைப் பற்றிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆய்வானது காவல் நிலையத்தின் தூய்மை,
புகார் கொடுக்க வரும் மக்களிடம் காவலர்கள் அணுகுமுறை, புகாருக்கான தீர்வு, மாற்றுத்திறனாளிக்கான வசதி, சுத்தமான குடிநீர் மற்றும் முறையாக பராமரிக்கப்படும் கோப்புகள் என்ற முறையிலும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டும் அனைத்தையும் ஆய்வு செய்து நாடு முழுவதும் 10 சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் இந்திய அளவில் நான்காம் இடம் மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இது தேனி மாவட்ட காவல் அலுவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மேற்படி காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை தெற்கு மண்டல காவல் துறை தலைவர் அவர்கள் பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here