
கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய கயர்லாபாத் காவல்நிலைய ஆய்வாளரை பாராட்டிய அரியலூர் மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன்:
அரியலூர் மாவட்டம், தேளூர் கிராமத்தில் வசிக்கும் பரமேஸ்வரி என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.திடீரெனஅவருக்குபிரசவவலிஏற்பட்டதில்ஆட்டோவின் மூலம்அரியலூர்மருத்துவமனைக்குசெல்லும்போதுவி.கைகாட்டியில் ஆட்டோபழுதானதில்அவரதுகணவர் இரவில்செய்வதறியாதுதிகைத்து நின்றவரையும் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணையும் கண்ட கயரலாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள போலீஸ் ஆம்புலன்ஸிக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீஸ்ஆம்புலன்ஸ்வீ.கைகாட்டியிலிருந்தகர்ப்பிணியானபரமேஸ்வரியை மிகவும் பத்திரமாக அரியலூர்அரசுமருத்துவமனையில் இன்று சேர்த்தனர்.
தற்போது பரமேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஊரடங்கு காலத்தில் சிறப்பாக செயல்பட்ட கயர்லாபாத் காவல்ஆய்வாளர்மற்றும்ஆம்லன்ஸ்ஓட்டுனர்இருவரின்செயல்பாட்டையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.