காவல்துறையினர் பொது மக்களுக்கு உதவும் வகையில் பணியாற்ற வேண்டும், – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை

167

காவல்துறையினர் பொது மக்களுக்கு உதவும் வகையில் பணியாற்ற வேண்டும், – எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு செய்து, அதில் பணியாற்றும் காவல் துறையினருக்கு ‘பொது மக்களுக்கு உதவும் வகையில் பணியாற்ற வேண்டும்’ என அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள முத்தையாபுரம், திருச்செந்தூர், செய்துங்கநல்லூர், புதுக்கோட்டை, எப்போதும் வென்றான், கயத்தாறு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை இன்று (13.07.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, தேவையான உபகரணங்கள் இயங்கும் நிலையில் உள்ளனவா, முதலுதவிப்பெட்டி உள்ளனா என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப்பின் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்களுக்கு ‘விழிப்புடன் பொது மக்களுக்கு உதவும் வகையில் பணியாற்ற வேண்டும், விபத்து நடந்தால் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவியளிக்க வேண்டும், ஆம்புலன்ஸ் வாகனங்களை எதிர்பார்த்து காலம் தாழ்த்தாமல் எவ்வளவு விரைவாக, அவர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்க துரித நடவடிக்கை எடுத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும், வாகனத்தில் உள்ள ரிவால்விங் விளக்குகள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும”, என்பன உள்ளிட்ட பல அறிவுரைகள் வழங்கினார். சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here