
கரூர் – 13.07.2020
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவின் பேரில் குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் குளித்தலை லாரி அசோசியேஷன் ஓட்டுனர்களுக்கு கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் லாரி ஓட்டுனர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், வெளியூரிலிருந்து வரும் போது யாரையும் ஏற்றிவர வேண்டாம், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்ற வேண்டாம், குறிப்பிட்டுள்ள வேகத்தை தாண்டி வாகனத்தை இயக்க வேண்டாம், எக்காரணம் கொண்டும் குடிபோதையில் வாகனத்தை ஓட்ட வேண்டாம் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதில் கலந்துகொண்ட 40 லாரி ஓட்டுனர்களுக்கும் முகக் கவசம், சனிடைசர் மற்றும் கபசுர குடிநீரை வழங்கினார்.