செய்யூர் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி தேவேந்திரன் கைது

260

செய்யூர் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி தேவேந்திரன் கைது

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நயினார் குப்பம் கிராமத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளிகளாக போலிசாரால் தேடப்பட்டு வந்த தேவேந்திரன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய இருவரை தேடி வந்த நிலையில் கடந்த 8ம் தேதி புருஷோத்தமன் மதுராந்தகம்
காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தார். தலைமறைவாக இருந்த தேவேந்திரனை செய்யூர் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தநிலையில் நேற்று சென்னை வியாசர்பாடியில் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற சென்ற செய்யூர் போலீசார் அவரை கைது செய்து மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி திருமால் 15 நாட்கள் சிறை காவலில் வைக்கும் படி உத்திரவிட்டார்.

படம்: இளம்பெண் தற்கொலை வழக்கில் தீவிரமாக தேடப்பட்டு வந்த குற்றவாளி திமுக பிரமுகர் தேவேந்திரன்.

உத்தமன் செய்தியாளர் செங்கல்பட்டு மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here