
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு !
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் தினமும் காலை வேளையில் கட்டட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்களை சமூக இடைவெளி யோடு நிற்க வைத்து முகக் கவசம் அணிதல் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றின் அவசியத்தையும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் பணிகள் நடக்க வேண்டும் என மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம் கொரோனா குறித்த விழிப்புணர்வினை கட்டிடத் தொழிலாளர்களுக்கு எடுத்துரைத்தார் உடன் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
