

அரியலூர் மாவட்ட காவல் கண்
காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி அரியலூர் மாவட்ட காவல்துறையினர்சாலைபாதுகாப்பு மற்றும் கொரோனா குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று கயர்லபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜவேல் கயர்லாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய நாகலூர் மற்றும் சின்னநாகலூர் கிராம பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது காவல்துறைஉதவி ஆய்வாளர் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது 100 நாள் வேலை செய்யும்பொழுது அனைவரும் சமூகஇடைவெளியைகடைப்பிடிக்க வேண்டும் கண்டிப்பாகஅனைவரும் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில் கிராம மக்கள் விழிப்புணர்வோடுஎச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார் . பின்னர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றினை பற்றியும், அது பரவும் விதம் பற்றியும் விளக்கி இதிலிருந்து நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது என்பது குறித்தும் கூறி. கிராம மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, தனிமனித சுத்தத்தையும் பேணிக்காத்து, முகக் கவசங்கள் அணிய வேண்டுமென்றும், கைகளை அடிக்கடிநன்குசுத்தம்செய்துகொள்வது நல்லது என்றும் கைகளின் மூலமே கொரோனவைரஸ் அதிக அளவில் பரவுகிறது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இக் கிராம விழிப்புணர்வு குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டது. மேலும் குழந்தைதிருமணம்,குழந்தைளுக்கு எதிரான குற்றங்கள்,திருட்டு, தலைகவசம் அணிவது, பொது மக்களிடம் விளக்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது.