சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 16ஆம் தேதி வரை சிபிஐ காவல்
சிபிஐ 5 நாள் அனுமதி கேட்ட நிலையில் 3 நாள் அனுமதி அளித்தது மதுரை நீதிமன்றம்

328

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தாக்கல் செய்த மனு மீது இன்று காலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரும் கோரட்டில் ஆஜாராகினர். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 போலீசாரை விசாரிப்பது மிக முக்கியமான ஒன்று என கூறினார். ஆனால் தாங்கள் சிபிஐ காவலுக்கு செல்ல விரும்பவில்லை என 5 பேரும் மறுப்பு தெரிவித்தனர். உடனடியாக  சிபிஐ காவலில் செல்வது குறித்து 5 போலீசாரிடமும் நீதிபதி தனித்தனியே கேட்டறிந்தார். பின்னர் சிபிஐ தரப்பிலான மனுவினை ஏற்றுக்கொண்ட நீதிபதி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசாரையும் 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். 5 பேரும் வரும் 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆஜர்படுத்தவும் சிபிஐக்கு உத்தரவிட்டார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here