தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கொரோனா நோய்தொற்றின் தாக்கத்தை கண்டறிய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் தேனிமாவட்ட கலெக்டர் அவர்களின் அமைப்பாக முதன்முறையாக நான்கு பேர் கொண்ட பறக்கும்படை என்னும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நகராட்சி பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் முக கவசம் அணியாமல் பாதுகாப்பில்லாமல் நடந்து செல்வோர் மற்றும் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் அனுமதி இல்லாமல் கடைகளைத் திறந்து வைப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அபராதமும் அளித்து வருகின்றனர். இதில் பெரியகுளம் தென்கரை காவல் நிலைய துணை ஆய்வாளர் பாலமுருகன் அவர்களும், கால்நடை பராமரிப்பு துறையை சேர்ந்த மருத்துவர் மைதிலி பிரியா அவர்களின் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டதாக ஜூனியர் போலீஸ் நியூஸ் செய்திகளுக்கு தங்கள் நடவடிக்கைப்பற்றி பதிவு செய்தனர். பெரியகுளம் செய்திகளுக்காக கார்த்திகேயன்