வேதாரண்யம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட
300 கிலோ எடையுள்ள கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்..

159

வேதாரண்யம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட
300 கிலோ எடையுள்ள கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடியில் அதிகாலையில் காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்ட போது வேதாரண்யம் நோக்கி வந்த இனோவா காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் காரின் 300 கிலோ எடையுள்ள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர் . பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கலின் மதிப்பு சுமார் ரூ 70 லட்சம் என்று கூறப்படுகிறது. காரைபின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நந்தகோபால் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் வந்த ஒட்டுனர் உட்பட இருவர் தப்பியோடிய நிலையில் அவர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர

வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடியில் காரில் 300 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தொடர்பாக
கதிரவன்.
நந்தகோபால்,
கனகராஜ் . கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரை கைது செய்து நாகை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்…நாகையிலிருந்து செய்தியாளர் சூரியமூர்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here