








திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பகலவன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி கொரோனா தோற்று பரவுவதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக தினமும் காலை ஆஜர் அணிவகுப்பின் போது ஊட்டச்சத்து உணவு பொருட்களான 2 முட்டை அல்லது வேர்க்கடலை பின்பு பொட்டுக்கடலை, சீரகம், மிளகு, வெற்றிலை மற்றும் வாரத்தில் மூன்று தினங்களுக்கு காலையில் கபசுர குடிநீர் ஆகியவை இன்று முதல் 15.07.2020 தினமும் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும் காவல்துறையினர் இரவு பகல் பாராமல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நன்றாக வேலை செய்ய முடியும். காவலர்கள் தினமும் சுடு தண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும். ஊட்டச்சத்துப் பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று திருச்சி சரக துணைத்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.