கோவையில் புது முயற்சியில் போராட்டத்தில் நோய் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக முழு உடல் பாதுகாப்பு கவசம் அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கோவை மாநகர காவல் துறையினர்.. வீடியோ உள்ளே

210

கோவையில் புது முயற்சியில் போராட்டத்தில் நோய் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக முழு உடல் பாதுகாப்பு கவசம் அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கோவை மாநகர காவல் துறையினர்

கோவையில் கொரோனா நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தவும், மக்களை காப்பற்றவும் அரசு மதுபான கடைகளான டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி SDPI கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர். உக்கடம் பகுதியில் S D I P கட்சியினர் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினார்கள். கோவில்களில் பக்தர்கள் சென்று வழிபட்டாலோ, பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தினாலோ, சர்ச்சுகளில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டாலோ, கொரானா நோய் தொற்று பரவும் என்று கூறும் அரசு மதுபான கடைகளை மட்டும் திறந்து வைத்துள்ளது. எனவும் கோவையில் மதுபான கடைகள் மூலமாகதான் தொற்றுகள் அதிகமாக பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறினர். மேலும் காவல்துறையினர் ஆர்ப்பாட்டகார்களிடம் இது போன்ற நிகழ்வுகளால் நோய் தொற்று பரவும் சூழ்நிலை உருவாகும் எனவே உங்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து இந்த வேண்டுகோளை ஏற்று ஆர்பாட்டக்காரர்கள் சிறிது நேரம் டாஸ்மாக் கடைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி பின்னர் அமைதியாக கலைந்து சென்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here