திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.. உயர் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு..

151

15.07.2020 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள பழனி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு.முருகன் இ.கா.ப அவர்கள் தலைமையில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.முத்துச்சாமி இ.கா.ப. அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுப்பது குறித்தும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய குற்றவாளிகளை பிடித்த காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி காவல்துறை தலைவர் அவர்கள் பாராட்டினார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here