மெஞ்ஞானபுரம் அருகே
கல்விளை கிராமத்தில் பக்கத்து வீட்டிற்கு
டிவி பார்க்கச் சென்ற சிறுமி கொலை!
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கல்விளைப் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள இடம் இந்திரா நகர். இங்கு இன்று காலை 7 வயது சிறுமியும் அவளது சகோதரனும் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்கச் சென்றுள்ளனர்.
பிள்ளைகளின் பெற்றோரில் தகப்பனார் வாண வேடிக்கை வெடி தயாரிப்பு செய்பவர் என்பதால் வெளியூர் சென்றுவிட்டார் போலும். தாய் அப்பகுதியில் உள் வயல்காட்டில் பருத்தி எடுக்கச் சென்றுள்ளார்.
டிவி பார்க்கச் சென்ற வீட்டிலிருந்த குடும்பத்தினர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் தூத்துக்குடியிலிருந்து அப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களது மகன் போதைப் பொருள் உபயோகிப்பவர் என்று கூறப்படுகிறது.
சிறுமியை கொலை செய்து தூக்கிச் சென்று அருகில் உள்ள கால்வாய்ப் பகுதியில் போட்டுவிட்டு வந்துள்ளான். சகதியுடன் வந்த அவனை சிலர் எங்கு சென்று வருகிறாய் எனக் கேட்டபோது மழுப்பலான பதில் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து இருந்திருக்கிறான்.
இதற்கிடையில் சிறுமியின் சடலத்தைப் பார்த்த அப்பகுதியினர் அவனைப் பிடிப்பதற்குள் தப்பித்து ஓடியிருக்கிறான். அதற்குள் அங்கு வந்த மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் விரட்டிப் பிடித்துச் சென்றுள்ளனர். குற்றவாளியிடம் விசாரித்து வருகின்றனர்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா அல்லது போதையில் இக்கொலையை அவ்வாலிபர் செய்தாரா என்பது தெரிய வரும்.
மொத்தத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் பெருகத் தொடங்கிவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
