திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்…
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஓம்பிரகாஷ் மீனா மாற்றப்பட்டு புதிய கண்காணிப்பாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டிருந்தார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு 3 முதல் 5 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க தனி வாட்ஸ்அப் எண் விரைவில் அறிவிக்கப்படும்..