
பசுமை காக்க குறுங்காடுகள் அமைக்கும் பணியில் அரியலூர்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன்..
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகில் செட்டித்திருக்கோணம் கிராமத்தில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் 117 வந்து பிறந்த நாளை முன்னிட்டு பல்லுயிர்ப் பாதுகாவலர்கள் அமைப்பு சார்பில் சிவன் கோவில் அருகே பெரிய ஏரிக்கரையில் குறுங்காடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குறுங்காடுகள் அமைக்கும் பணியில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். பல்லுயிர் பாதுகாவலர்கள் அமைப்பின் பசுமை காக்கும் முயற்சியை பாராட்டிய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், பின்பு அப்பகுதி மக்களுக்கு முகக் கவசம் வழங்கி கொரோனா பரவும் விதம் குறித்தும்,முகக் கவசம் அணிதல் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில்பெரியதிருக்கோணம் கிராமமுக்கியஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
