Home தமிழ்நாடு பல்லாவரம் அருகே பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எட்டு பேர் கொண்ட கும்பல் கைது

பல்லாவரம் அருகே பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எட்டு பேர் கொண்ட கும்பல் கைது

0
பல்லாவரம் அருகே பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எட்டு பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை,பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எட்டு பேர் அடங்கிய கும்பலை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர். திருநீர்மலை, சரஸ்வதிபுரம், 2- வது தெருவில் உள்ள பூங்கா ஒன்றில் கடந்த 14-ம் தேதி பத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஒன்று சேர்ந்து, திருநீர்மலை, ரங்கா நகரை சேர்ந்த, ஆன்லைன் மூலம் காய்கறி விநியோகம் செய்யும் அருண்(24) என்பவரது பிறந்த நாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர்.இது தொடர்பான புகைப்படங்கள் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கதுல்லா தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை நடத்தி, திருநீர்மலையை சேர்ந்த அருண் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here