
கோவில்பட்டி சோதனைச்சாவடியில் காரில் துப்பாக்கியுடன் வந்த 3பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சோதனைச் சாவடியில் நேற்றிரவு கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் சோதனை ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் வந்த 3 பேரை சோதனை செய்த போது ஒரு துப்பாக்கி , 5 தோட்டா மற்றும் இரண்டு அரிவாள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நெல்லையைச் சேர்ந்த ராஜ்குமார், வினோத் மற்றும் சுரேந்தர் என்பது தெரியவந்தது. இதில் ராஜ்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. கோவில்பட்டி காவல் நிலையத்தில் வைத்து ராஜ்குமார் உள்ளிட்ட மூன்று பேரிடம் , டிஎஸ்பி கலைகதிரவன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்



