கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல் எல்லைகளில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா தொற்றினால் தற்போது ஐந்தாவது காவல் நிலையமாக உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

624


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, மருத்துவத்துறை, மாநகராட்சி துறை, காவல்துறை என அனைத்து துறைகளும் இணைந்து தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக போலீசார் ஊரடங்கு விதி மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவையில் சில காவலர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி காவலர்கள் பாதிக்கப்படுவதால் காவல் நிலையங்களும் மூடப்பட்டு வருகிறது. இப்படி கோவையில் போத்தனூர், சூலூர், துடியலூர், மதுக்கரை உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸாருக்கு தொற்று உறுதியாகியதையடுத்து காவல் நிலையங்கள் மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்கடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் கோவை கொடிசியாவில் உள்ள கொரானா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடன் பணிபுரிந்த மற்ற காவலர்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்துவருகிறது. இதைத்தொடர்ந்து கோவை உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உக்கடம் காவல் நிலையம் தற்காலிகமாக கோவை வின்சென் ரோட்டில் உள்ள நல்லாயன் சமூக கூடத்தில் செயல்பட ஆயத்தபணிகள் நடந்து வருகிறது. கோவையில் தற்போது உக்கடம் காவல் நிலையத்துடன் 5 வது காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here