
திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.ஆனி விஜயா அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவுபடி கொரோனா தொற்றிலிருந்து
தற்காத்துக்கொள்வதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக இன்று முதல் மாவட்ட
காவல்காவல்துறை அலுவலகம்
மற்றும் மாவட்டத்திலுள்ள
அனைத்துகாவல்நிலையங்
களிலும் காலை ஆஜர் அணி
வகுப்பின் போது காவல்
துறையினருக்கு ஊட்டச்சத்து உணவாக இரண்டுமுட்டை(அ)
வேர்க்கடலை ,பின்பு பொட்டுக்கடலை ,மிளகு வழங்கப்பட்டது. மேலும் வாரத்தில் மூன்று தினங்களுக்கு காலையில் கபசுரக்குடிநீர் வழங்கவும் ,மேலும்
காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையின் கீழுள்ள காவல் நிலைய காவலர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு இதனை சிறப்பாக செய்ய
வேண்டும் எனவும் காவல்
துறையினருக்கு அறிவுறுத்த
பட்டுள்ளது.மேலும் காவல்
துறையில் இரவு பகல் பார்க்காமல் பணி செய்யும் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நன்றாக பணி செய்ய முடியும்.ஆகவே காவலர்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும் என்று திருச்சி சரக காவல் துணைத்தலைவர் அறிவுறுத்தலை நினைவுகூர்ந்து பின்பற்றுமாறும் மாவட்ட காவல்
துறை கண்காணிப்பாளர் உத்தர
விட்டுள்ளார்.


