கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் அருகே பழங்குடியின மலைவாழ் கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு போலிசார் நேரில் உதவி: கிராமத்திலேயே முதன்முறையாக 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு டிஎஸ்பி பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் காவல்நிலையத்திற்குட்பட்டது இருளப்பட்டி கிராமம். 55 குடியிருப்புக்கள் மட்டுமே உள்ள இந்த குக்கிராமத்தில் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர், கொரோனா ஊரடங்கால் சரியான கூலி வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்த இருளர்பட்டி கிராம மக்களுக்கு,
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர் அவர்களின் உத்தரவின்படி தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா அவர்கள் 55 இருளர் இன குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகளின் தொகுப்பை வழங்கினார்.
பின்தங்கிய கிராமமான இருளர்பட்டி கிராமத்தில் இதுவரை 10 ஆம் வகுப்புக்கூட தேர்ச்சி பெறாத நிலையில் கிருஷ்ணவேணி என்னும் மாணவி முதல்முறையாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதையறிந்த டிஎஸ்பி சங்கீதா அவர்கள் மாணவியை நேரில் அழைத்து வாழ்த்தியதுடன் மாணவியை உற்சாகப்படுத்தும் நோக்கில் பண உதவியை செய்ததுடன் மாணவியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
கெலமங்கலம் எஸ்ஐ பார்த்திபன் அவர்களின் ஏற்ப்பாட்டின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் இராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமலேஷ் உட்பட காவலர்கள் பங்கேற்றனர்.