21 மீனவ கிராமத்தினர் நாளை கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் அறிவிப்பு… இரண்டு மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 1500 போலீசார் குவிப்பு…

715

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மீனவ கிராமங்களில், மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பைபர் படகை பயன்படுத்தும் மீனவர்கள், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமுல்லைவாசல், கீழமூவர்க்கரை மீனவர்களிடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டதால் மீனவ கிராமங்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனைத்தொடர்ந்து சுருக்குமடி வலை பயன்பாட்டு மீனவர்கள், சிறு தொழில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலைக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டிகும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் எதிராக தமிழக அரசு முடிவெடுக்குமேயானால், நாளை ஜூலை 17ம் தேதி பழையார் முதல் கோடியக்கரை வரை உள்ள மீனவர்கள் தங்கள் குடும்பத்தோடு கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட மீனவ கிராமங்களில் பரபரப்பு நிலவுகிறது. இதனையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 11 ஏடிஎஸ்பிக்கள், 25 டிஎஸ்பிக்கள், 46 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 190 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1512 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கலவரம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மயிலாடுதுறை எஸ்பி திரு.ஸ்ரீநாத் IPS மற்றும் திருவாரூர் எஸ்பி திரு.துரை IPS ஆகியோர் முக்கிய இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மயிலாடுதுறை செய்தியாளர்,
சுபாஷ்சந்திரபோஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here