
சென்சார் மூலம் சானிடைசர் வினியோகிக்கும் இயந்திரத்தை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்V.R. ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தின் நுழைவு பகுதியில் பணிபுரியும் காவலர்கள் , அமைச்சுப் பணியாளர்கள், மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரும் மக்களின் பயன்பாட்டிற்காக தொடுதல் இன்றி உணர்வின் மூலம் இயங்கும் இ_சானிடைசர்
வினியோகிக்கும் இயந்திரம் (Touch hand free sanitizer dispenser ) இன்று பொருத்தப்பட்டு அதனை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் திறந்துவைத்தார். மேலும் இந்த இயந்திரத்தை காவலர்களின் நலன்கருதி அளித்த அரியலூர்கோல்டன்மருத்துவமனைக்குமாவட்டகாவல்துறை
கண்காணிப்பாளர் நன்றியை தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் இதில் உள்ள உணர் கருவியின் மூலம் தொடுதல் இல்லாமல் Sanitizer பயன்
படுத்துவதன் மூலம் ஒருவரிடமிருந்துமற்றொருவருக்குதொற்று பரவுதலை தடுக்கும் விதமாகவும், கைகளை சுத்தம் செய்வதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என தெரிவித்தார்.
