திருச்சி மாநகர காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் – மாநகர ஆணையர் உத்தரவு

210

திருச்சி ஜூலை 17

திருச்சி மாநகர காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் – மாநகர ஆணையர் உத்தரவு

திருச்சி மாநகர காவல்துறையினரிடையே கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் வழங்க திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் கபசுர குடிநீர் வழங்கினார்.
மேலும் திருச்சி காவல் ஆணையர் உத்தரவின்பேரில் திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் 2,000 காவல் அதிகாரிகள், ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு கபசுர குடிநீர் வழங்கும் பொருட்டு திருச்சி மாநகரத்தில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கள், எடமலைப்பட்டிபுதூர் காவலர் குடியிருப்புக்கள், பீமநகர் காவலர் குடியிருப்புக்கள், மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்புக்கள், உறையூர் காவலர் குடியிருப்புக்கள், சிந்தாமணி காவலர் குடியிருப்புக்கள் மற்றும் ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்புக்கள் ஆகிய குடியிருப்புக்களில் உள்ள அனைத்து காவலர் குடும்பத்தாருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அதே போல் காவல் துணை ஆணையர் அலுவலகங்கள், அனைத்து காவல் உதவி ஆணையர் அலுவலகங்கள், அனைத்து காவல் நிலையங்கள், போக்குவரத்து பிரிவுகள், அனைத்து சிறப்பு பிரிவுகளில் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும், ஆளிநர்களுக்கும் கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது. மேற்படி கபசுர குடிநீர் காவலர்களுக்கு 17.07.2020-ந்தேதி முதல் 19.07.2020-ந்தேதி வரை 3 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Trichy JK
9894920886.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here