திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதய வர்மன்
மீதான துப்பாக்கிச்சூடு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து மேலும் ஒரு துப்பாக்கி மற்றும் பல்வேறு வெடிபொருட்களுடன் த
தோட்டாக்கள் பறிமுதல்—-

189

திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதய வர்மன்
மீதான துப்பாக்கிச்சூடு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து மேலும் ஒரு துப்பாக்கி மற்றும் பல்வேறு வெடிபொருட்களுடன் த
தோட்டாக்கள் பறிமுதல்—-

செங்கல்பட்டு, ஜுலை.17: செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் (எ)இதயவர்மன் துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம்
ஏ.எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் உட்பட போலீசார் நேரில் சென்று திருப்போரூர் அடுத்த செங்காட்டிலுள்ள திமுக எம்எல்ஏ
இதயவர்மன்
வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ஏர்கன் துப்பாக்கி மற்றும் நான்கு கிலோ குண்டு மற்றும் குண்டு தயாரிக்கும் இயந்திரம் ஈயம் உட்பட பல தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர். மேலும் பிஸ்டல் புல்லட் நான்கும் மற்றும் 50க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர். கடந்த 11 ஆம் தேதி எம்எம்எல்ஏ துப்பாக்கி சூடு நடத்திய போது

தையூரை சேர்ந்த கீரை வியாபாரம் செய்து வந்த சீனிவாசன் என்பவர் மீது புல்லட் பாய்ந்த நிலையில் குண்டடிபட்டு ஏற்கனவே செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரிலும் சம்பவத்திற்கு காரணமான குமார் கொடுத்த புகாரின் பேரில் எம்எல்ஏ தரப்பினர் எம்எல்ஏ உட்பட 13 பேர் வழக்கு பதியப்பட்டு நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் குமார் தரப்பில் பதினோரு பேரும் வழக்கு பதியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் மாலை மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டதில் எம்எல்ஏ வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட குண்டுகள் மற்றும் தோட்டாக்களை கைப்பற்றி கீரை வியாபாரி சீனுவாசன் மீது பாய்ந்த தொட்டாக்களும் ஒன்றனவா என்று சென்னையிலுள்ள பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தால் செங்காடு பகுதியில் போலிசார் குவிக்கப்பட்டதால் பொதுமக்களிடையே பெரும் பரப்பரப்பு காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here