பெரம்பலூர் -அரியலூர் நெடுஞ்சாலையில் விபத்திற் குள்ளாகி உயிருக்கு போராடிய பெண்மணியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய காவல்துறை உதவி ஆய்வாளர் ரவி மற்றும் காவலர் ராஜசேகர் இருவருக்கும் பொதுமக்கள் சமூகவலைதளங்கள் மூலம் பாராட்டு

1176

பெரம்பலூர் மாவட்டம், பேரளி அருகே பெரம்பலூர் மாவட்டம் கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மற்றும் அவரது அக்கா மீனாட்சி ஆகியோர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்
டிருந்த போது திடீரென மாடு ஒன்று சாலையை கடக்க வந்ததால் அதன் மீது மோதாமலிருக்க நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மீனாட்சிக்கு தலையில் பலத்த இரத்த காயம்பட்டு மயக்கத்தில் இருந்தவரை அந்த வழியாக காவல்துறை அரசு வாகனத்தில் வந்த அரியலூர் மாவட்டம் தனிப்பிரிவில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ரவி மற்றும் காவலர் ராஜசேகர் ஆகிய இருவரும் மீனாட்சியை தான் வந்த அரசு வாகனத்தில் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். மேற்படி அரியலூர் மாவட்ட
காவல்துறையினரின் செயலினை கண்டு பொது மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here