மதுரை செல்லூர் அருகே 6 பேர் கொண்ட கும்பல் கைது…

706

கடந்த 2018 ம் ஆண்டு செல்லூர், போஸ் வீதி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக
முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் நேற்று 15.07.2020 -ம் தேதி இரவு இளங்கோவன் என்ற ராஜ்கிரண் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததால் செல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய செல்லூர் காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை செய்த நபர்களான 1.வீரபாண்டி 2.அருண்பாண்டி 3.கொப்பரை என்ற பாலசுப்பிரமணி 4. வெங்கடேஷ் 5.மாலிக் பாட்ஷா 6.முத்துப்பாண்டி ஆகிய ஆறு நபர்களையும் நேற்று 16.07.2020-ம் தேதி கைது செய்தார்கள். குற்றவாளிகளை விரைவில் கைது செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டினார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here