
மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல் ஆணையர் அவர்களின் முக்கிய அறிவிப்பு…
பொதுமக்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் பேசும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளில் வரிசையில் நிற்கும்போதும் மற்றும் பொது இடங்களிலும் யாரேனும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தால் உடனடியாக அவர்கள் இருப்பிடத்துடன் கூடிய புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து மதுரை மாநகர வாட்ஸ்அப் குற்ற முறையீட்டு எண்ணிற்கோ (83000-21100) அல்லது Madurai City Police என்ற முகநூல் பக்கத்திலோ தாராளமாக பதிவிடலாம்.
முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நோயை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்… என மதுரை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்