
நாகை மாவட்டம் நிருபர்.சூரியமூர்த்தி.
16:7:2020.
வேதாரண்யம் அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் உயிருடன் மீட்பு – 2 குழந்தைகள் பலி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் சுரேஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சுரேஷ் அவரது தாய்க்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து தனது மனைவியையும் குழந்தையும் காணவில்லை என தேடியுள்ளார் .அப்போது அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள கிணற்றில் சத்தம் கேட்டுள்ளது அங்கு சென்று பார்த்த போது மனைவியும் 2 குழந்தைகளும் தண்ணீரில் கிடப்பது தெரியவந்தது. உடனடி யாக அக்கம்பக்கத்தினர் வேதாரண்யம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தாய் யோகாம்பிகை இரண்டு ஆண் குழந்தைகள் தரணீஸ்வரன் (3 வயது)கதிர்பாலன் (1வயது)ஆகிய மூவரையும் கிணற்றிலிருந்து மீட்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்….
இரண்டு குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. தாய் யோகாம்பிகை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தாய் யோகாம்பிகை பலமுறை அரசு தேர்வு எழுதியும் அரசு வேலை கிடைக்கவில்லை என சற்று மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகின்றது…..செய்தியாளர் நாகையிலிருந்து சூரியமூர்த்தி.
