7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பியோட சம்பவத்தில் 14 மணி பிறகு நேற்று இரவு கைது காவல்துறையினர் செய்தனர் … விபரம் உள்ளே..

812

புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி தப்பியோடிய ராஜா பிடிப்பட்டான்

இந்நிலையில் புதுக்கோட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் கைதாகி தப்பி ஓடிய ராஜா முள்ளூர் காட்டுப்பகுதியில் பிடிபட்டதாக காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பி ஓடிய விவகாரத்தில் காவலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில் கடந்த 16 நாட்களுக்கு முன்பு 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கண்மாய் கரையோர புதரில் வீசப்பட்டிருந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற அப்போதைய எஸ்பி அருண்சக்தி குமார் கொலையாளியை பிடிக்க உத்தரவிட்ட நிலையில் சில மணி நேரங்களில் அதே பகுதியைச் சேர்ந்த சாமிவேல் என்ககிற ராஜா (27) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான்.

சிறுமியை கொன்ற கொலையாளிக்கு விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்களும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதையடுத்து போக்சோ தலைவரை, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் மருத்துவர் ஆனந்த் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். இந்த நிலையில்தான் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜாவுக்கு புதன் கிழமை மருத்துவப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 2 போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

முதல்கட்ட சோதனை முடிந்த நிலையில் வியாழக்கிழமை காலையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் அங்கேயே தங்க வைத்து பாதுகாப்பு கொடுத்துள்ளனர். ஆனால் இன்று காலை போலீசாரிடம் இருந்து கைதி ராஜா தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியானது. தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் 6 தனிப்படைகள் அமைத்து அருகில் உள்ள கரையப்பட்டி, தென்னதிராயன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக ஒருவன் ஓடியதாக ஒரு மூதாட்டி சொன்னதாக தொடர்ந்து காட்டுப் பகுதியை ஆய்வு செய்ய ட்ரோன் கேமரா பயன்படுத்தி தேடியும் பயனில்லை. எஸ்.பி. ஒரு மோட்டார் சைக்கிளில் தேடும் பணியில் ஈடுபட்டார். மாலை வரை நூற்றுக்கணக்கான போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்..

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் காவல் நிலைய குற்ற எண் 119/20 மற்றும் கணேஷ் நகர் காவல் நிலைய குற்ற எண் 645/20 ஆகிய இரண்டு வழக்குகளின் தப்பி ஓடிய எதிரி சாமிவேல் (எ) ராஜா வயது 26 என்பவரை புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலை சிட்கோ அருகில் #திருக்கோகர்ணம்காவல்நிலையகாவலர்_2173திரு_தவச்செல்வம் (cell. 9498208279) மற்றும் ஆயுதப்படை காவலர் 566 திரு.சிதம்பரம் ஆகிய இருவரும்(MCP 5 Duty) மடக்கிப் பிடித்துள்ளனர்…

இந்த கைதி ராஜா தப்பியோடிய பிறகு 14 மணி நேர போராட்டத்திற்கு காவல்துறையினர் கைது செய்தது புதுக்கோட்டை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here