
காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு வெப்ப அளவு மற்றும் ஆக்ஸிஜன் அளவு தினசரி பரிசோதனை செய்யும் காவல் ஆய்வாளர். …மதுரை மாநகர் காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் காவல் நிலையத்துக்கு பணிபுரிய வரும் காவலர் அனைவருக்கும் தினசரி வெப்ப அளவு மற்றும் ஆக்சிஜன் அளவையும் கட்டாயமாக பரிசோதனை செய்தபிறகே பணிக்கு தொடங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார் இதனை தொடர்ந்து மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் கள் மூலம் காவல் நிலையம் பணிபுரியும் காவலர்கள் அனைவருக்கும் இப் பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது அடிப்படையில் இன்று மதுரை சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி பணிக்கு வந்த அனைத்து காவலர்களுக்கும் வெப்ப மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை பிறகு பணிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் அவர்களின் முயற்சிக்கு காவலர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது காவலர்கள் மீது அக்கறை கொண்டு தினசரி அவரே நேரடியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் காவலர்கள் உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசனை பெற்று வர அறிவுறுத்தியும் செய்கிறார் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்



