
கிராம கண்காணிப்பு குழு கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.
அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம பகுதிகளிலும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் அதிகாரிகள் இன்று கிராம பொது மக்களுக்கு கிராம கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தினர். அதன்படி ஜெயங்
கொண்டம் அருகே மகிமை புரம் கிராமத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் வசந்த், ஆலத்தியர் கிராமத்தில் உதவி ஆய்வாளர் செல்வகுமார், குழுமூர் கிராமத்தில் காவல் ஆய்வாளர் ராஜ்குமார், கீழப்பழுவூரில் உதவி ஆய்வாளர் ராஜ்குமார், கூவாகத்தில் காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், அஸ்தினா
புரத்தில் காவல்ஆய்வாளர் ராஜா ஆகியோர் தலைமையில்
கூட்டங்கள் சமூக இடைவெளியுடன் மிகத் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இக்கூட்டங்களில் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி நாளை ஞாயிற்று
கிழமை மூன்றாவது முழு ஊரடங்கில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆபத்து சூழ்நிலைகளில் அவசர உதவி எண் 100 அல்லது காவலன் செயலி பயன்படுத்துவதன் மூலம் உடனடியாக காவல்துறையின் உதவியை பெறவும் குற்றத்தடுப்பு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இக்கூட்டங்களில் ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


