
கீழே கிடந்த 20 ஆயிரத்தை காவலர் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்த தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
மதுரை தனக்கங்குளம் பகுதியைச் சேர்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ரமேஷ் பாபு என்பவர் விளாச்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 20 ஆயிரம் ரொக்கமும், வங்கி புத்தகம், பேன் கார்டு,ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் கொண்ட பையை கீழே கிடந்ததை கண்டு அதை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அருகிலுள்ள திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கீதா ரமணியிடம் ஒப்படைத்தார்.
இதனைத்தொடர்ந்து அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் விளாச்சேரி யைச் சேர்ந்த பிச்சை ராவுத்தர் மகன் ஜலில் என்பது தெரியவந்தது.அவர்களிடம் உரிய விசாரணை செய்த பின்னர் 20 ஆயிரம் ரொக்கமும் வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை திருப்பரங்குன்றம் மகளிர் காவல் ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைத்தார்.
இந்த சம்பவத்தால் தலைமையாசிரியர் ரமேஷ் பாபுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டை குவித்து வருகின்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்