தமிழகத்தில் மத மோதல்களை உண்டாக்கும் வகையில் செயல்படும் பாசிச காவி பயங்கரவாதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமுமுக மற்றும் ம.ம.க சார்பில் மாநகர காவல்துறை ஆணையரிடம் இடம் மனு அளித்தனர்

503

திருச்சி ஜூலை 18

தமிழகத்தில் மத மோதல்களை உண்டாக்கும் வகையில் செயல்படும் பாசிச காவி பயங்கரவாதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமுமுக மற்றும் ம.ம.க சார்பில் மாநகர காவல்துறை ஆணையரிடம் இடம் மனு அளித்தனர்

மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் உதுமான்அலி தலைமையில் திருச்சி மாநகர ஆணையர் லோகநாதனிடம் மனு அளித்தனர், அதில்

சமூகவலைதளங்களில் முகநூல் பக்கங்கள் பக்கங்களில் தொடர்ச்சியாக
இஸ்லாமியர்கள் மீதும் இஸ்லாமியர்
உயிருக்கு மேலாக கருதும் முகமது நபிகள், அன்னை அயிஷா மீதும்
இழிவான முறையில் கருத்துக்களை பதிவிட்டு மத மோதல்களையும், தமிழ் நாட்டை அச்சுறுத்தும் வகையிலும் தேவையற்ற விமர்சவைகளையும் சிவனடியார் மௌண்ட் கோபால், வர்மா கார்டூனிஸ்ட் என்கிற சுரேந்திகுமார், மேலும் முகநூல் பதிவு மூலம் சமூக மக்களிடையே பதட்டத்தை உருவாகிக்கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கல்யாணராமன், மாரிதாஸ், கிஷோர்சாமி ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய
வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
இந்த நிகழ்வில்
மாவட்டச் செயலாளர் இப்ராஹிம் பொருளாளர் முகமதுராஜா உட்பட 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Trichy JK
9894920886.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here