நாமக்கல் – ம.ஜெகதீசன். 10.07.20
நாமக்கல் காவல் நிலையத்தில் தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் பொருத்தம், முக கவசம் அணிந்து கைகளை சுத்தம் செய்தால் மட்டுமே காவல்நிலையத்திற்குள் அனுமதிக்கப் படுவர் என காவல் அதிகாரி தகவல். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் காவல் நிலையத்திற்கு வரும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் காவல் நிலைய நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டது. இதனை காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். காவல் நிலையத்திற்கு வருபவர்கள் தங்கள் கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்திக்கொள்ள தானியங்கி கிருமிநாசினி இயந்திரத்தின் அருகே தங்களது கைகளை கொண்டு செல்லும்போது தானியங்கி முறையில் இரண்டு வினாடிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கபடுகிறது. இதுகுறித்து ஆய்வாளர் செல்வராஜ் கூறும்போது காவல்நிலையத்திற்கு வரும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தால் மட்டுமே காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார்.

