Home COVID-19 நாமக்கல் மாவட்டத்திற்குள் இ பாஸ் இல்லாமல் வருபவர்களை தொழிற்சாலைகளில் பணிபுரிய அனுமதிக்க கூடாது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்திற்குள் இ பாஸ் இல்லாமல் வருபவர்களை தொழிற்சாலைகளில் பணிபுரிய அனுமதிக்க கூடாது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

0
நாமக்கல் மாவட்டத்திற்குள் இ பாஸ் இல்லாமல் வருபவர்களை தொழிற்சாலைகளில் பணிபுரிய அனுமதிக்க கூடாது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

நாமக்கல் – ம.ஜெகதீசன். 18.07.20

நாமக்கல் மாவட்டத்திற்குள் இ பாஸ் இல்லாமல் வருபவர்களை தொழிற்சாலைகளில் பணிபுரிய அனுமதிக்க கூடாது, மாவட்டத்திற்குள் அனுமதியில்லாமல் நுழைபவர்களை தடுக்க மேலும் 10 இடங்களில் புதிதாக சோதனை சாவடி அமைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொழிற்சாலைகள், கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வணிகர்கள் மற்றும் இதர தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் தங்களது பணியாளர்கள் வெளிமாநிலம் அல்லது வெளி மாவட்டத்திலிருந்து வரும் போது கட்டாயம் இ - பாஸ் பெற்றிருக்க வேண்டும், அவ்வாறு வரும் தொழிலாளர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து 15 நாட்கள் தனிமைப்படுத்திய பிறகே பணி செய்ய அனுமதிக்க வேண்டும், இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் " நாமக்கல் மாவட்டத்திற்குள் இ பாஸ் இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லை பகுதிகளில் மேலும் 37 இடங்கள் கண்டறியப்பட்டு 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள இடங்கள் அடைக்கப்படும் எனவும், தொழிற்சாலைகளுக்கு பணிக்கு வருபவர்கள் இ பாஸ் பெற்று கொரோனா பரிசோதனை செய்து வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் வந்தவர்களை தொடர்ந்து ஆலை நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளதாகவும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் துவக்கப்பட்ட ஹலோ சீனியர்ஸ், லேடீஸ் பஸ்ட் என்ற செல்போன் செயலிக்கு இதுவரை 50 புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here