பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அவா்கள் பொது மக்களை கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து காக்கும் வகையில் தமிழகத்தில் ஜுலை மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழுஊரடங்கு அறிவித்துள்ளாா்கள். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜுலை மாதம் 05.07.2020, 12.07.2020, 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எவ்வித தளா்வுகளும் இல்லாத முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
எனவே பொது மக்கள் அன்றைய தினம் வெளியில் வருவதை தவிா்த்து
தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விதிகளை மீறி தேவையின்றி வெளியில் வருபவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அரசு அறிவித்துள்ள முழுஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நன்றி!
-பி.உமாமகேஸ்வரி,
மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டை.