
கரூர்- 19.07.2020
அம்மா திட்டிய காரணத்திற்காக கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமியை மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
கரூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யபிரியா அவர்கள் 18.07.2020 இரவு ரோந்து அலுவலில் இருந்தபோது 100 கால் மூலம் காந்திகிராமம் டெல்லி ஸ்வீட்ஸ் எதிரே A1 உணவகம் முன்பு கையில் பையுடன் ஒரு சிறுமி நின்று கொண்டிருப்பதாக வரப்பட்ட தகவலின் பேரில், நேரில் சென்று விசாரித்த போது தோகமலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கடவூர் தாலுகா வேலாயுதம்பாளையம் என்றும், வீட்டு வேலை செய்யவில்லை என்று அம்மா திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வந்துவிட்டதாகவும் கூறியதன் பேரில், அவரது அம்மாவிற்கு தொடர்புகொள்ள போன் நம்பர் எதுவும் இல்லாத காரணத்தால், வெள்ளப்பட்டி ஊர்த்தலைவர் போன் மூலம் தொடர்பு கொண்டு, சிறுமியின் அம்மாவிடம் பேசி, பிறகு குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் கும்மராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஹைவே பெட்ரோல் வாகனத்தை வரவழைத்து பெண் காவலர் விமலா மூலம் அனுப்பி வைத்து சிறுமியின் அம்மாவிடம் இன்று அதிகாலை 3:30 மணிக்கு சிறுமி நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டார்.