ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள பல்லவன் குளத்தில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தடை விதித்துள்ளார்

689

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள பல்லவன் குளத்தில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தடை விதித்துள்ளார்

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில் நாளை பல்லவன் குளத்தில் சுமார் 6 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருவார்கள் என்ற காரணத்தினாலும் காவல்துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தாலும் மக்களுடைய கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும் என்றும் மேலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு இருக்காது என மாவட்ட நிர்வாகம் கருதுவதால் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு அப்பகுதியில் தர்ப்பணம் கொடுக்க தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது

எனவே நாளை நடக்க இருந்த ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடைக்கு வியாபாரிகள் புரோகிதர்கள் பொதுமக்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன

கரூர் திருச்சி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் விதித்துள்ள தடையை தொடர்ந்து தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி இந்த தடையை விதித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here