
காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் போராடி பிடித்த காவல்துறையினர்க்கு எஸ்.பி.சண்முக பிரியா பாராட்டு–
காஞ்சிபுரம், ஜுலை.19: காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சி தாலுக்கா
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏனாத்தூர் அருகே 16.07.2020 அன்று
மதியம் 1.30 மணிக்கு ராஜசேகர்(52). த/பெ.ராதாகிருஷ்ணன் என்பவர்
கட்டிட கட்டுமான வேலையை பார்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில்
(TN 21 AR 3655) என்ற வாகனத்தில்
வந்துகொண்டிருக்கும் போது இரண்டு நபர்கள் பதிவு
எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்து ராஜசேகர் என்பவரிடமிருந்த
ஒரு செல்போனை வழிப்பறி செய்து சென்றுள்ளனர். இது சம்மந்தமாக
கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முக பிரியா உத்தரவின் பேரில் காவல்
கட்டுபாட்டு அறை மூலம் அனைத்து காவல் நிலையங்கள், சோதனை
சாவடிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் உஷார் படுத்தப்பட்டது.
அதனடிப்படையில் பொன்னேரிக்கரை புறக்காவல் நிலையத்தில்
பணிபுரிந்துவந்த காவலர் மதிவாணன், காஞ்சி தாலுக்கா காவல்
நிலையம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு-Vல் பணிபுரியும் சிறப்பு உதவி
ஆய்வாளர் மணிகண்டன். மற்றும் முதல்நிலை காவலர் டில்லிபாபு, பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தை சேர்ந்த போலிசார் மேற்படி
சம்பவத்தில் ஈடுபட்ட இரு இளம் சிறார்களை பிடித்து அவர்களிடமிருந்து
வழிப்பறி செய்த செல்போனை கைப்பற்றிய பின்னர் அவர்கள் இருவர் மீதும்
காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு
பதிவுசெய்யப்பட்டுள்ளது.
17.07.2020) அன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்
கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா உத்தரிவின் பேரில்
மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளம்சிறார்களை உடனடியாக பிடித்த காவலர்
மதிவாணன், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்
மணிகண்டன், காஞ்சி தாலுக்கா போலிசார் டில்லி பாபு, பாலுசெட்டி சத்திரம் முதல் நிலை காலவர் ஆகியோர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு
வெகுமதி அளித்து மாவட்ட எஸ்.பி. தெ.சண்முக பிரியா வெகுவாக பாராட்டினார்.