
கொரோனா தொற்றுநோய் பிடியிலிருந்து மீண்டு மக்கள் பணியாற்ற காவலர்களுக்கு எஸ் பி பகலவன் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்..
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் (ஐபிஎஸ்) அவர்கள் இன்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்குத் திரும்பிய நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் அவர்களையும் மற்றும் முதல் நிலை காவலர் சேது அவர்களையும் பூங்கொத்து கொடுத்து கைதட்டி உற்சாகமாக பணிக்கு வரவேற்றார். மேலும் அங்கிருந்த அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு முட்டை, சீரகம், மிளகு, பொட்டுக்கடலை, வெற்றிலை ஆகிய ஊட்டச்சத்து உணவு பொருட்களுடன் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
