கோட்டைபட்டினம் மளிகை கடையில் தரைக்கு கீழே குழிதோண்டி பதுக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

235

மளிகை கடையில் தரைக்கு கீழே குழிதோண்டி பதுக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராமன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார், கோபாலபட்டினம் கிராமத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த கடையின் தரைப்பகுதியின் கீழ் குழி தோண்டி, அதில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தரையை தோண்டி, அங்கிருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த கடையின் உரிமையாளர் சபியுல்லாவை(வயது 38) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here