Home தமிழ்நாடு கோவையில் ஜூலை 18 ஆம் தேதி, மூன்று கோயில்களின் மீது தீ வைத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளதாக, மாவட்ட காவல் ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஜூலை 18 ஆம் தேதி, மூன்று கோயில்களின் மீது தீ வைத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளதாக, மாவட்ட காவல் ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

0
கோவையில் ஜூலை 18 ஆம் தேதி, மூன்று கோயில்களின் மீது தீ வைத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளதாக, மாவட்ட காவல் ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை:

கோவையில் ஜூலை 18 ஆம் தேதி, மூன்று கோயில்களின் மீது தீ வைத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளதாக, மாவட்ட காவல் ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

“நேற்று கோவை மாநகரில் மூன்று கோவில்கள் அருகில் மர்ம நபர் டயர் மற்றும் உபயோகமற்ற பொருட்களை தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பாக கஜேந்திரன் (48) என்பவரை இன்று கோவை மாநகர காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு படையினர் பிடித்தனர். இவர் எந்த அமைப்போ கட்சியோ சாராதவர் என்பது குறிப்பிடத்தக்கது”, என்று கோவை மாவட்ட காவல் ஆணையாளர், சுமித் சரண் தனது டிவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார்.
கோவை, நேற்று சனிக்கிழமையன்று டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவில், ரயில்நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில்,
நல்லாம்பாளையத்திலுள்ள செல்வ விநாயகர் கோவில் ஆகிய கோவில்களின் கூரைகள் மீது தீ வைக்கப்பட்டது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, இச்சம்பவத்தை கண்டித்து பல இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு மற்றும் நாளை, திங்கட்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின்பேரில் ஆறு தனிப்படை அமைத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, தனிப்படை போலீசார் மாகாளியம்மன் கோவிலில் தீ வைக்கும் சிசிடிவி
காட்சிகளை ஆராய்ந்த போது, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் தகவல்களை சேகரித்தனர்.
விசாரணையில் அந்த நபரின் பெயர், கஜேந்திரன் (48) என்றும், அவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசார் அவரை சின்னயம்பாளையம் ஆர்.ஜி புதூர் அருகே வைத்து இன்று கைது
செய்துள்ளனர்…

ஜூனியர் போலிஸ் நியூஸ் செய்தியாளர் ரமேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here