தலைமை காவலர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டு

635

தலைமை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

நேற்று 18.07.2020 ம் தேதி தெப்பக்குளம் ச&ஒ காவல்நிலைய தலைமை காவலர் திரு.சரவணக்குமார் அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது TN 64 D 5184 என்ற இரு சக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் கொண்டு சென்று CCTNS (CRIME AND CRIMINAL TRAKING NETWORK AND SYSTEMS ) இணைய தளத்தில் வாகன எண்ணை பதிவிட்டு பார்த்த போது அந்த வாகனம் தெற்குவாசல் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் காணாமல் போனதாக திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
பணியில் துரிதமாக செயல்பட்டு திருட்டு வாகனத்தை கண்டுபிடித்ததற்காக தலைமை காவலரை மதுரை மாநகர காவல் ஆணையர் .பிரேம் ஆனந்த் சின்ஹா, பாராட்டினார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here