
பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத சடலம் மீட்கப்பட்டது.
துவரங்குறிச்சி ஆற்று நீரில் அடையாளம் தெரியாத சடலம் மிதந்தது. இதனை கண்ட ஊர் பொதுமக்கள் பட்டுக்கோட்டை காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.


