மதுரையில் இன்று முழு ஊரடங்கு, இறைச்சிக்கடை, கடைகள், பெட்ரோல் பங்க் வரை விடுமுறையால் வெறிச்சோடிய மதுரை.

258

மதுரையில் இன்று முழு ஊரடங்கு, இறைச்சிக்கடை, கடைகள், பெட்ரோல் பங்க் வரை விடுமுறையால் வெறிச்சோடிய மதுரை.

மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 24-ஆம் தேதி 14.7 – 20 முதல்வரை ஊரடங்கு அமலில் இருந்தது 15-7-20 தேதி முதல் சில தளர்வுகள் மதுரை மாவட்டத்திற்கு அறிவித்துள்ளது சில இந்திலையில், இந்த நோய் ஒரளவு குறைந்திருந்தாலும் நோய்த்தொற்று முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் மேலும் ஏழு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் இம்மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வும் இன்றி மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாவட்டம் முழுவதும் இறைச்சி கடை, காய்கறி, சிறிய மளிகைக் கடைகள் உட்பட எந்த கடைகளும் திறக்கப்படவில்லை, வாகனங்கள் இயங்கவில்லை. மாவட்டம் முழுதும் வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது. பெட்ரோல் பங்குகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், பால், மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வழங்கப்படும். இந்நிலையில் நாளை முதல் பெட்ரோல், டீசல் பங்குகளில் முகவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படுமென அறிவித்துள்ளது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை ண

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here