மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை. ஆன்-லைன் விற்பனையில் நூதன மோசடி பொதுமக்கள் ஜாக்கிரதை

806

OLX வலைதளம் பழைய பொருட்களை வாங்கவும் விற்கவும் ஒரு இணைப்பு பாலமாக தற்போது செயல்பட்டு வருகிறது. இதனை தவறாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றது.

*OLX ல் Car அல்லது Two Wheeler குறைந்த விலைக்கு விற்பதாக முதலில் ஒருவர் விளம்பரம் செய்கின்றார். அந்த விலைக்கு வாங்க விரும்பும் மக்கள் அவரது நம்பரை தொடர்புகொண்டு பேசி பிறகு வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு தங்களது விபரங்களை ராணுவ அதிகாரி போல போலியான புகைப்படங்களை அனுப்புகின்றனர். வேறு ஒருவருடைய Car அல்லது Two Wheeler புகைப்படம் மற்றும் RC book ஆகியவற்றையும் பகிர்கின்றனர்.

*இதனை உண்மை என நம்பி பொதுமக்கள் தங்களது முழு முகவரிகளை அடையாள அட்டையுடன் அனுப்பி முன் பணத்தை Googlepay அல்லது paytm வழியாக செலுத்தி விடுகின்றனர். பிறகு மீண்டும் பார்சல் கட்டணம் என்று ஒரு புகைப்படத்தை அனுப்பி பணம் கேட்டு போன் செய்கின்றனர். அதையும் நம்பி மீண்டும் மீண்டும் பணத்தை அனுப்புகின்றனர். பின்னர் அவர்கள் தொடர்பை துடித்துவிடுகின்றனர். அதன்பிறகு பொதுமக்கள் காவல் துறையை நாடி வருகின்றார்கள்.

*பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து போலி விளம்பரங்களை நம்பாமல் நேரடியாக சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளவும்.

*ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி பொருட்கள் வாங்க நினைப்பதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் தங்களை சுற்றியுள்ளவர்களுக்கு இந்த செய்தியினை கொண்டு சேர்க்க வேண்டுமென்று மதுரை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here