
மனித நேயம் மிக்க தென்காசி காவல் ஆய்வாளர் திரு. ஆடிவேல்..
மேலும் ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ள இன்ஸ்பெக்டர் ஆடிவேல்..
தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சுமித்ரா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து அந்த குழந்தையின் படிப்பு செலவு,குடும்பத்தின் செலவு , ஆகியவற்றை ஏற்றுள்ளார்.ஏற்கனவே மூன்று குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைத்து வருகிறார். அந்த குடும்பத்திற்கு உதவியும் செய்து வருகிறார்.
சுமித்ரா என்ற இந்த பெண் குழந்தைக்கு அப்பா கிடையாது.அம்மாவிற்கு காது கேட்காது. வாய் பேச முடியாது.
இப்படி உள்ள சூழ்நிலையில் உள்ள குழந்தையை தத்தெடுத்து நிதி உதவி வழங்கி வாழ்நாள் முழுவதும் உதவுவதற்கு பொறுப்பேற்றுள்ள தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் அவர்களின் கருணையை போற்றுவோம்..
இந்த நிகழ்வு அனைவரும் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது…
தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் அவர்களின் மனிதநேயமிக்க இந்த செய்தியே வெளியிடுவதே பெருமை கொள்கிறோம் ..
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களுடன் ஜூனியர் போலிஸ் நியூஸ் செய்தி குழுமம்..