
ராமநாதபுரம் மாவட்டம்
காவல் துறை முக்கிய அறிவிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளான தேவிபட்டினம், ராமேஸ்வரம் திருப்புல்லாணி, மரியூர், உத்திரகோசமங்கை போன்ற ஊர்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஆடிஅமாவாசை திருவிழாவானது வருடம் வருடமாக சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவிற்கு உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பெருந்திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வந்துள்ளனர். மேலும் இந்த வருடம் ஆனது 144 தடை உத்தரவு கொரோனா நோயின் காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், இந்த வருடம் தடையின் காரணமாக இந்த வருடம் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் திரு எஸ்பி.வருன் குமார் ips.. தெரிவித்துள்ளார் மேலும் இத்தகைய அறிவிப்பிற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மீறுவோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரு எஸ் பி. வருண்குமார் ips அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்